திருக்கடையூர் கோவிலில் இளையராஜாவுக்கு இன்று சதாபிஷேகம்

இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Update: 2022-05-31 04:19 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் 80 வயதை நிறைவு செய்த இசையமைப்பாளர் இளையராஜா, இந்த கோவிலில் சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்