சாஸ்தாவிநல்லூர்,புதுக்குளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

சாஸ்தாவிநல்லூர்,புதுக்குளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-02 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் யூனியன் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்திநகரில் உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தலைவர் திருக்கல்யாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராபின்சன், தொடக்க வேளாண்மை கூடடுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி, யூனியன் பற்றாளர் இசக்கி மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முருங்கை பயிருக்கு பயிர் கடனாக ரூ.50 ஆயிரம் உயர்த்தி வழங்கிட அறிவித்த மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கால்நடை ஆய்வாளர் பேச்சியம்மாள், உதவி தோட்ட கலை அலுவலர் முகேஷ், தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருஸ்மைக்கேல், ரேசன் கடை ஊழியர் சகாயம், வருவாய் கிராம உதவியாளர் இசக்கி, சமுதாய வளர் பயிற்றுநர் எஸ்கலீன் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

* ஆலங்கிணறு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் பாலமேனன் தலைமை தாங்கினார். யூனியன்குழு தலைவர் ஜெயபதி, யூனியன் பற்றாளர் ஆவுடை ஈஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முருகன் வரவேற்றார். இதில் வேளாண்மை அலுவலர் மணிபாண்டி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜான்பிரிட்டோ, ஞானமலர், கனி, வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் கவுவிக்கப்பட்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* நயினார்பத்து பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் தலைவர் அமுதவல்லி திலீப்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜகுமாரி, பற்றாளர் சண்முகசுந்தரி. ஊராட்சி உறுப்பினர்கள் முத்துமணி, சுந்தர கனி, ரேவதி. ஊராட்சி செயலாளர் ஜார்ஜ் செல்வின் சகாயம் மற்றும் அங்கன்வாடி, சுகாதாத்துறை, கல்வித்துறையினர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்