சர்வசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

வண்டுவாஞ்சேரி சர்வசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

Update: 2023-08-23 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி பெரிய திடல் பகுதியில் அமைந்துள்ள சர்வ சித்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக, மகாலட்சுமி ஹோமங்கள், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. பின்னர் கோவில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்