திருச்செந்தூர் தைப்பூச திருவிழாவில் இந்த ஆண்டும் சர்ப்ப காவடிகளுக்கு தடை

தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-23 05:58 GMT

தூத்துக்குடி,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குரு சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர். அப்போது திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

தைப்பூச திருவிழாவிற்காக 120-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் சாதி ரீதியான கட்சி கொடிகளையோ, பனியன்களையோ கொண்டு வரக்கூடாது என காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டும் பக்தர்கள் சர்ப்ப காவடி கொண்டு வர அனுமதி மறுக்கப்படுவதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்