தயார் நிலையில் வேட்டி-சேலைகள்

தயார் நிலையில் வேட்டி-சேலைகள்

Update: 2022-12-28 10:46 GMT

உடுமலை

தமிழக அரசு, வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ரொக்கம், 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது. உடுமலை தாலுகாவில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 8ஆயிரத்து906ஆகும். இவர்கள் ரேஷன்கடைகளில் பொங்கல் தொகுப்பு, பெறுவதற்குரிய டோக்கன் நாளை (வெள்ளிக்கிழமை) முதல்வருகிற 4-ம் தேதி வரை வீடுவீடாக வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக முதல்கட்டமாக உடுமலை தாலுகாஅலுவலகத்திற்கு

24ஆயிரம் வேட்டிகள் வந்துள்ளன.

--------------



Tags:    

மேலும் செய்திகள்