சேலை விற்பனை கண்காட்சி
கலெக்டர் அலுவலகத்தில் சேலை விற்பனை கண்காட்சி நடந்தது
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பா தேவி, கோ-ஆப்டெக்ஸ் மதுரை மண்டல மேலாளர் மோகன் குமார், மேலாளர் முல்லைக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் ஆர்கானிக் புடவை, காஞ்சீபுரம், சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோயம்புத்தூர் மேம்பட்டு சேலை, சுங்கடி, கண்டாங்கி, கைத்தறி சேலை மற்றும் காட்டன் சேலை உள்ளிட்ட ஏராளமான சேலை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.