புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவில் சப்பர பவனி

புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது.

Update: 2023-10-09 18:39 GMT

தொண்டி

திருவாடானை அருகே உள்ள ஓரிக்கோட்டையில் புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் திருவிழா திருப்பலி, மறையுரை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை அருட்தந்தையர்கள் யூஜின், தாமஸ் ஜூலியன், ஓரிக்கோட்டை பங்குத்தந்தை எட்வர்ட் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் ஜெபமாலை மாதா, புனித சூசையப்பர், புனித அருளானந்தர், புனித செபஸ்தியார், தூய மிக்கேல் அதிதூதர் ஆகியோர் வீதிஉலா வந்தனர். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை புனித ஜெரால்டு மஜெல்லா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அஞ்சுகோட்டை பங்குத்தந்தை அன்பு ஆனந்த் முன்னிலையில் ரட்சகர் சபை இல்ல அதிபர் பீட்டர் லூயிஸ் கொடியேற்றி வைத்தார். இதைதொடர்ந்து அருட்தந்தையர்கள் தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு சிறப்பு ஜெபம் செய்து வழிபட்டனர். 8 நாட்கள் நடைபெறும் இந்த ஆலய திருவிழாவில் தினமும் திருவிழா திருப்பலி, மறையுைர நிகழ்த்தப்படுகிறது. வருகிற 14-ம் தேதி அருட்தந்தையர்கள் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், சப்பர பவனியும் நடைபெறுகிறது. 15-ந் தேதி காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்