மரக்கன்றுகள் நடப்பட்டன

செங்கோட்டையில், நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Update: 2023-03-22 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி வல்லம் ரோட்டில் உள்ள கசடு கழிவு நுண்ணுர (எப்.எஸ்.டி.பி.) நிலையத்தில் வைத்து நகராட்சி சார்பில் உலக வன நாளை முன்னிட்டு பசுமை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் பழனிசாமி வழிகாட்டுதலின்படி வல்லம் ரோடு எப்.எஸ்.டி.பி. நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பின்னா் அதில் செழிப்பு உரங்கள் இடப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள், சுகாதார பணி மேற்பார்வையாளா்கள் முத்தமாணிக்கம், காளியப்பன் மற்றும் பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணி மேற்பார்வையாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்