சுற்றுலா மைய வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி
பிச்சாவரம் சுற்றுலா மைய வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
புவனகிரி,
வனத்துறை சார்பில் தேசிய மரக்கன்று தினத்தையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையம் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கடலூர் மாவட்ட வனஅலுவலர் சுரேஷ்சோமன், உதவி வனப்பாதுகாவலர் பாலசுப்பிரமணியன், வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாங்குரோவ் இன மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். இதில் வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், அபிராமி, சரண்யா, வனக்காவலர்கள் பாலகிருஷ்ணன், ராஜசேகர், படகு ஓட்டுனர் முத்துக்குமரன், அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.