மரக்கன்று நடும் நிகழ்ச்சி

எஸ்.தங்கப்பழம் வேளாண்ைம கல்லூரி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-01-12 00:15 IST

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்ைம கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம் புன்னையாபுரம், சிங்கிலிபட்டியில் நடைபெற்றது. இதையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், சங்கரன்கோவில் வனச்சரகர் கார்த்திகேயன் மற்றும் வனச்சரகர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். புன்னையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி கண்ணன் கலந்து கொண்டார். ேதக்கு, பாதாம், புங்கம், பலா, நாவல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தென்காசி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுந்தரேசபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்