சிங்கம்புணரி,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க சிவகங்கை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழிகாட்டுதலின்படி சிங்கம்புணரி ரெங்கநாதன் காந்திமதி டிரஸ்ட் சார்பில் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். தி.மு.க. அவைத்தலைவர் சிவக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அய்யன்ராஜ் மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர பொருளாளர் கதிர்வேல், வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் சிவபுரி சேகர், சியாமளா பார்த்திபன், பிரதிநிதி புகழேந்தி, முன்னாள் சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகிருஷ்ணன், முன்னாள் காளாப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், வர்த்தக அணி கே.ஆர்.ஏ. கணேசன், சொக்கு என்ற சொக்கலிங்கம், காளாப்பூர் கல்யாணசுந்தரம், மருத்துவமனை மருந்தாளுநர் சேகர், பணியாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரெங்கநாதன் காந்திமதி டிரஸ்ட் மற்றும் சிவகுமார், ஆனந்த கிருஷ்ணன் செய்திருந்தனர்.