நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று; மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு நட்டார்

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை, மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு நட்டார்.

Update: 2022-06-05 20:09 GMT

நெல்லை:

ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5-ந்தேதி புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. 1972-ம் ஆண்டில் தொடங்கிய உலக சுற்றுச்சூழல் தினம் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு மரக்கன்றுகளை நட்டினார்.

கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன், தீபா, அன்பு செல்வி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் (பொறுப்பு), சார்பு நீதிபதியுமான செந்தில் முரளி, சார்பு நீதிபதிகள் மனோஜ் குமார், இசக்கியப்பன், மோகன்ராம் மற்றும் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, திருவேனி, ஆறுமுகம், விஜயகுமார், பாக்கியராஜ், கவி பிரியா, அலெக்ஸாண்டார் மற்றும் வழக்கறிஞர்கள் முத்து ராம், ஜோதி முருகன் மற்றும் சுஜிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்