கரூர் சணப்பிரட்டி பகுதியில் நேற்று நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசுகையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் 12,500 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதில், கரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.