மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா பிருதூரில் நடந்தது.

Update: 2023-06-05 11:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா பிருதூர் ஊராட்சியில் நடைபெற்றது.

விழாவுக்கு செஞ்சிலுவை சங்க தலைவர் மலர்சாதிக் தலைமை தாங்கினார். வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ந.ராஜன்பாபு, எ.ஸ்ரீதர், பிருதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க செயலாளர் ம.ரகுபாரதி வரவேற்றார்.

விழாவில் வந்தவாசி ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணிஆறுமுகம் கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊராட்சி பூங்காவில் 101 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்வகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் லட்சுமி பாபு, ஊராட்சி செயலர்கள் எம்.பி.வெங்கடேசன், எல்.சீனிவாசன், சங்க ஆலோசகர் கு.சதானந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் வி.எல்.ராஜன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்