மரக்கன்றுகள் நடும் விழா

திண்டிவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

Update: 2023-05-09 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் 30 வகையான பழ மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளுக்கு வேலி அமைக்கப்பட்டு, சொட்டுநீர் பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவில் திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, துணை ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா, செஞ்சி தாசில்தார் நெகருணிஷா, தாசில்தார் செல்வமூர்த்தி, சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்