மரக்கன்று நடும் விழா

உமரிக்காட்டில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2022-10-22 18:45 GMT

ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு உமரிக்காடு ஊராட்சியில் மரக்கன்று நடும் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உதவி திட்ட இயக்குனர் நாகராஜன் கலந்து கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் மற்றும் அன்றோ, பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 50 தென்னை கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ஹரிஷ், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்