மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா நடந்தது;

Update: 2022-10-06 18:45 GMT

கடையநல்லூர்:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடையநல்லூர் நகராட்சி போகநல்லூர் உரக்கிடங்கில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அய்யாபுரம் கூட்டுறவு சங்க தலைவரும,் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செல்லத்துரை கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, ரா.முருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவண்ணா மசூது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்