மரக்கன்றுகள் நடும் விழா

கல்வராயன்மலையில் மரக்கன்றுகள் நடும் விழா

Update: 2022-08-24 17:11 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் அருண் ராஜா, ஒன்றியக்குழு துணை தலைவர் பாஷாபீ ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். தொடர்ந்து அவர் கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்திலும் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் சின்னத்தம்பி, மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி, மண்டல துணை தாசில்தார் தேவதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்தினம், சீனிவாசன், குப்புசாமி, செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரபீக், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்