மரக்கன்று நடும் விழா

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Update: 2023-09-03 11:55 GMT

தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பதிவாளர் (தணிக்கை) மணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்து பேசினார். விழாவில், மாவட்ட முகாம் உதவியாளர் கருணாகரன், வேட்டவலம் சார்பதிவாளர் சீனுவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மணி, கவிதாஏழுமலை, கனகாபார்த்திபன், அம்பிகாராமதாஸ், பாக்யராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி லோகநாதன், ஒன்றிய பிரதிநிதி அருள்மணி, ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் விக்கி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சின்னா உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

முடிவில் கீழ்பென்னாத்தூர் சார்பதிவாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்