தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் பகுதியில் நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட பசுமை குழு உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தலைமை தாங்கினார். புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா முனியசாமி மரக்கன்று நடவுப் பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் களக்காடு தங்க இசக்கியம்மாள், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சங்கீதா, முத்துக்கனி, மாரியப்பன், கருப்பசாமி, சசிகலா, சந்தனமாரி, இயற்கை ஆர்வலர்கள் கஸ்தூரி, தமிழ்செல்வி, பார்வதி, பனையூர் வில்சன், ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைத் தலைவர் காசிவிசுவநாதன் செய்து இருந்தார். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் 10 ஆயிரம் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் கூறினார்.