சேலம் தளவாய்ப்பட்டியில் தி.மு.க. சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

சேலம் தளவாய்ப்பட்டியில் தி.மு.க. சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்;

Update: 2023-07-09 20:04 GMT

சூரமங்கலம்

சேலம் மத்திய மாவட்ட வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி கட்சி கொடியேற்று விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா தளவாய்ப்பட்டியில் நடைபெற்றது. சேலம் வடக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். சேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெயின்போ பி.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சேலம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தளவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த விழாவில் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி சங்கரன், அமுதா கோவிந்தராஜி, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜேஸ்வரி வடிவேல், மாவட்ட பிரதிநிதி விஜயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், இளைஞர் அணி நிர்வாகி ஜெகன், சேலம் வடக்கு ஒன்றிய பொருளாளர் சசிகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மாணிக்கம், வடக்கு ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜா, ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜெயவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோகுல்ராம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்