சங்கரராமேஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நடந்தது.

Update: 2023-02-04 18:45 GMT

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தெப்பத் திருவிழா நடந்தது.

கோவில்

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவ திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் நேற்று இரவு தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. இதைமுன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

தெப்பத் திருவிழா

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் தெப்பக்குளத்துக்கு சுவாமியும், அம்பாளும் அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பூஜைகளை செல்வம் பட்டர் தலைமையில் பட்டர்கள் நடத்தினர்.

விழாவில், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்