சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

என்.ஐ.ஏ.அதிகாரிகளை கண்டித்து சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-23 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொகுதி தலைவர் நவாஸ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தாகீர் அலி, தொகுதி செயலாளர் பாபு, நகர தலைவர் ஆசாத்அலி, செயற்குழு உறுப்பினர் குல்ஜார் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் ஆகியோர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி துணை தலைவர் அக்பர், விடுதலை சிறுத்தைகள் கட்சி் ஒன்றிய செயலாளர்கள் தலித்சந்திரன், சிந்தனைவளவன், மக்கள் அதிகாரம் அமைப்பாளர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் பாரூக் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் சிராஜ், அக்பர், நகர தலைவர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தர்பார் கண்டன உரையாற்றினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஜான் பாஷா, நிர்வாகி சாஜான், கிளை தலைவர் அஜிதாபேகம், கிளை நிர்வாகிகள் இஸ்மாயில், சலீம், ஜான்கான், இனத்துல்லா, நஜீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி செயலாளர் சிராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்