தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-10-11 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததை கண்டித்து நடந்த இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.சி.டி.யு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசி, குத்தாலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டி.யு. தென்காசி மாவட்ட பொது செயலாளர் வேல்முருகன், தென்காசி மாவட்ட தூய்மை பணியாளர் சங்க கவுரவ தலைவர் பேச்சிமுத்து, கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தம்பிதுரை, தென்காசி மாவட்ட தூய்மை பணியாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், சி.பி.ஐ.எம்.எல். தென்காசி செங்கோட்டை தாலுகா செயலாளர் புதியவன் என்ற சுப்பிரமணியன் மற்றும் செங்கோட்டை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுசம்பந்தமாக நகராட்சி மேலாளர் கண்ணன், சம்பந்தபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்