கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா

கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-12 18:58 GMT

பணியை புறக்கணித்து போராட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து, தனியார் கைகளில் அளிக்கும் அரசாணைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தினக்கூலி, சுயஉதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். உள்ளாட்சி பணிகளை வெளிமுகமை, ஒப்பந்த முறைக்கு விட கூடாது.

மாவட்ட கலெக்டர் நிர்ணயித்துள்ள தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரூ.592, தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ரூ.669 ஊதியத்தை வழங்கிட வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ. 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமலாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை (சி.ஐ.டி.யு.) சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று காலை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா

தொடர்ந்து கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்