பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடைபெற்றது. அதன்படி கரூர் வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலைவீதியில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெக்ஸ்டைல் கமிட்டி இணை இயக்குனர் கவுரி சங்கர் தலைமையில், தர நிர்ணய அலுவலர் பாலாஜி, மத்திய அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் கரூர் ெரயில் நிலையத்தை சுற்றி கிடந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றி ரெயில்வே ஊழியர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.