வீரவநல்லூர் பேரூராட்சியில் தூய்மை பணி

வீரவநல்லூர் பேரூராட்சியில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

Update: 2022-08-28 19:29 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக, தூய்மை குறித்தும், குப்பைகளை தரம்பிரிப்பது குறித்தும் பொது மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து பழைய பாரதியார் பள்ளி அருகில் தூய்மை பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சத்யதாஸ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் வசந்தசந்திரா, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்