தெருவில் மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு
தெருவில் மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் வடிகால் வசதி இன்றி தெருவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாக்கடை போல் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி, மீண்டும் மழைநீர்தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..