வாய்க்காலிலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்காலிலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-16 18:43 GMT

ஆயக்கட்டு வாய்க்கால்

கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. அவ்வாறு செல்லும் வாய்க்கால்களில் ராஜ வாய்க்கால் ஒன்றாகும். இவ்வாறு உள்ள ராஜவாய்க்காலில் இருந்து ஈரோடு-கோவை சாலை பிரியும் முனியப்பன் கோவில் அருகே பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த பஞ்சாமதேவி ஆயக்கட்டு வாய்க்கால் மூலம் சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், இந்த வாய்க்கால் திருமுக்கூடலூர் வரை சென்று அமராவதி ஆற்றில் கலக்குகிறது.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

இவ்வாறு செல்லும் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் முட்புதர்கள் மண்டி செடி, கொடிகள் முளைத்தும் காணப்படுகிறது. மேலும் வாய்க்காலில் ஆங்காங்கே குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறன்றன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் நெரூர்-வாங்கல் பிரிவு சாலையில் உள்ள வாய்க்காலில் கழிவு நீருடன் சேர்ந்து சாயக்கழிவுகளும் வருகிறது. தற்போது கோடைகாலமாக உள்ள நிலையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வாய்க்காலில் தூர்வாரி செடி கொடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைக்காலத்துக்கு முன்பே வாய்க்காலை தூர்வாரினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்