கயத்தாறில் யூனியன் அலுவலகத்தில் சுகாதார குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம்
கயத்தாறில் யூனியன் அலுவலகத்தில் சுகாதார குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் சுகாதார மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமை யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, தூத்துக்குடி மாவட்ட கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராஜா, உதவி நிர்வாக பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ் மற்றும் 45 பஞ்சாயத்து செயலாளர்கள், மகளிர் குழு பற்றாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இதில் கயத்தாறு யூனியனில் தண்ணீரின் தரத்தை அறிவது எப்படி? தண்ணீர் சேகரிப்பு, சுகாதாரமான குடிநீரை கண்டுபிடிப்பு எப்படி? போன்றவை குறித்து பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வெங்கட்ராமன், வசந்தி, விமலா, பூர்ணிமா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.