தூய்மை பணியாளருக்கு பிரிவுபசார விழா

சாயர்புரத்தில் தூய்மை பணியாளருக்கு பிரிவுபசார விழா நடந்தது.

Update: 2023-07-01 19:15 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக 26 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பேச்சியம்மாளுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.

நகர பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி பிரபா முன்னிலை வகித்தார்.

பேச்சியம்மாளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்