சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் ஆனி மாத சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீசுவரர் மற்றும் கைலாசநாதருக்கு சந்தனாதி தைலம், நல்லெண்ணெய், புனித நீர், அரிசி மாவு, விபூதி, மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு, பால், தயிர், திருமஞ்சனம், நெய், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 15 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. ெதாடர்ந்து புத்தாடை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சுவாமி கோவிலிலும் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.