திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில் சனி பெயர்ச்சி யாக விழா

திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில் சனி பெயர்ச்சி யாக விழா

Update: 2023-03-30 18:45 GMT

பொள்ளாச்சி

விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் இணைந்து பொள்ளாச்சி ஜோதி நகர் அருள்ஜோதி திருமண மண்டபத்தில் சனி பெயர்ச்சி யாக விழா நடைபெற்றது. இதையொட்டி திருவாசகசித்தர் தாமோதரன் கலந்துகொண்டு பேசினார். மேலும் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ரிஷிகேஷ் தயானந்தா ஆசிரம தலைவர் பூஜ்யஸ்ரீ சாஷாத் கிருதாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து அருளாசி வழங்கினார். இதை தொடர்ந்து சனி பெயர்ச்சி யாக விழா நடந்தது. விழாவிற்கு ஆர்ஷ வித்யா பீடம் ததேவானந்தா சரஸ்வதி சுவாமி தலைமை தாங்கினார். யாக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கவுதம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை தலைவர் ரகுபதி, துணை தலைவர் ஓ.கே.முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம் மற்றும் திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில் ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள 2 பரிவார குடைகள் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்