சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா
சேரன்மாதேவி சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சங்கிலி பூதத்தார் கோவில் 14-வது ஆண்டு கொடை விழா நடந்தது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம், தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் குடிஅழைப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் தாமிரபரணி நதியில் இருந்து பால்குடம் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. ெதாடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனை, மதியக் கொடை விழா நடந்தது. இரவில் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், ஆட்டோ, வாடகை கார், வேன், லோடு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.