சங்கிலி மாடசாமி கோவில் பங்குனி கொடை விழா
கழுகுமலை சங்கிலி மாடசாமி கோவில் பங்குனி கொடை விழா நடைபெற்றது.
கழுகுமலை:
கழுகுமலையில் வடக்கு தெரு குறவன் குளம் அருகே உள்ள சங்கிலிமாடன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடந்தது. 12 மணிக்கு உச்சிகால பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. நேற்று காலை 10 மணியளவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.