சங்கடஹரசதுர்த்தி விழா

திருமக்கோட்டையில் சங்கடஹரசதுர்த்தி விழா நடந்தது.;

Update: 2023-10-03 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விநாயகருக்கு மோதக கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது. இதே போல் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஞானசக்தி விநாயகருக்கு சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்