கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. முன்னதாக சிக்கல் பள்ளிவாசலில இருந்து சந்தனம் கரைத்து சந்தன குடம் எடுத்து வரப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. ஆழியூர் பிரிவு சாலையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக தர்காவை வந்தடைந்து. நேற்று அதிகாலை பாத்திஹா ஓதி, செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ்விற்கு சந்தனம் பூசப்பட்டது. இதில் ஆழியூர் ஜமாத் நிர்வாகிகள், விழா கமிட்டியினர், ஜமாத்தார்கள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.