சந்தனக்கூடு ஊர்வலம்

செஞ்சியில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-08-14 19:06 GMT

செஞ்சி,

செஞ்சியில் உள்ள அசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவில் 89-ம் ஆண்டு சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் உருஸ் முபாரக் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பிறை கொடி ஏற்றி பாத்திகா ஓதி தத்ரூப் வழங்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு அசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சி செட்டிபாளையம் சம்பாப்பூரில் அமைந்துள்ள அசரத் சையத் பதவுல்லா ஷா அவுலியா தர்காவை சென்றடைந்தது. ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியபடி உற்சாகமாக சென்றனர்.. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) வரை சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை செஞ்சி உரூஸ் கமிட்டியார் சையத் அசுத்துல்லா, அப்துல் அஜீஸ், சர்தார், ஷாஜகான் ஷெரிப், சமியுல்லா மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்