ஹாஜி நூர் சாஹிப் தைக்காலில் சந்தனகூடு
நாகூர் ஹாஜி நூர் சாஹிப் தைக்காலில் சந்தனகூடு
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூரில் ஹாஜி நூர் சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. முன்பாக ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளுக்கு சென்று மீண்டும் தைக்காலை வந்தடைந்தது. தொடர்ந்து தைக்கால் டிரஸ்டி உபைதுல் ரஹ்மான் சாஹிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இதில் ஜாதிமத பேதம் இன்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நூர்சா தைக்கால் முஹல்லாவாசிகள் செய்து இருந்தனர்.