"சண்டைக்கு நான் ரெடி"- பாக்ஸிங்கிற்கு அழைத்த நபருக்கு பதிலடி கொடுத்த சீமான்..
பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருகிறேன் என்றும் சீமான் தெரிவித்தார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்த திருப்பமாக சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையேயான மோதலாக வெடித்தது.
இந்த நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை பாக்சிங்கிற்கு இழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக வீரலட்சுமி தரப்பில் எந்த கருத்தும் இதுவரை சொல்லப்படவில்லை.
இந்த நிலையில், தன்னை பாக்ஸிங்கிற்கு அழைத்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருகிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், அவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால் நான் அவரை எதிர்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.