அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

பாபநாசத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-06-30 20:29 GMT

பாபநாசம்;

பாபநாசம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் மறித்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டியில் வந்த நபர் வண்டியை அங்கேேய நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது38) என்பதும், அவர் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், சுரேசை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்