கரூர் வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவிரி ஆற்றில் டிப்பர் லாரி மூலம் மணல் திருடி கொண்டிருந்த வாங்கலை சேர்ந்த செல்வகுமார் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.