மணல் கடத்தல்; 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
விழுப்புரம் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள தெளி பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 4 மாட்டு வண்டிகளை வழிமறித்து போலீசார் சோதனை செய்ததில் அங்குள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே கிராமத்தை சேர்ந்த அய்யனார், தியாகராஜ், ஏழுமலை, சசிக்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.