மணல் கடத்தல்; டிராக்டர் பறிமுதல்
மணல் கடத்தல் தொடர்பாக டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வடபாலப்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தெத்துகாடு ஓடை அருகே வந்து கொண்டிருந்த டிராக்டரை வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும், டிரைவர் டிராக்டரை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து போலீசார், அந்த டிராக்டரை பார்த்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. அதனை தொடர்ந்து அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தல் தொடர்பாக வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.