மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

வாணியம்பாடி அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-31 12:09 GMT

வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், போலீசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, மேல்குப்பம் பகுதியில் இருந்து மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த குணசேகரன் (52) என்பதும், பாலாறு பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்