திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி மற்றும் போலீசார் மிட்டாதார் குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நம்பியாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்ததாக, மிட்டாதார் குளத்தை சேர்ந்த அல்பர்ட் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.