மண், கற்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

Update:2023-05-01 00:30 IST

ஓசூர்:

ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் மாலூர் சாலை, பேரிகை சாலை பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு டிப்பர் லாரியில் 5 யூனிட் மணலும், 2 டிப்பர் லாரிகளில் தலா 5 யூனிட் உடை கற்களும் கடத்தி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தாசில்தார் சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்