சனாதனம் இந்துக்களுக்கு எதிரானது-சபாநாயகர் அப்பாவு பேச்சு

சனாதனம் இந்துக்களுக்கு எதிரானது என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Update: 2023-09-10 19:43 GMT

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சனாதனம் இந்துக்களுக்கு எதிரானது. இதன்மூலம் 4 சதவீத பேர் மட்டுமே பயன்பெற்று வருகிறார்கள். மீதமுள்ள 96 சதவீதம் பேர் அடிமை வாழ்க்கைதான் வாழ்கின்றனர். கடந்த 1935-ம் ஆண்டுக்கு பின்னர், மெக்காலே பிரபுதான் அனைவருக்கும் சமமான கல்வியை கொண்டு வந்தார். நமது நாட்டில் சமூகநீதிக்கு முதலில் வித்திட்டவர்கள் அருட்தந்தையர்கள்தான்.

தற்போது ஏசு சபைகள் முடக்கம், மணிப்பூரில் 300 தேவாலயங்கள் இடிப்பு போன்றவற்றுக்கு காரணம், அனைவருக்கும் கல்வியை ஏசு சபையினர் கொடுப்பதை தடுக்கதான். இதுதான் சனாதனம். எனவேதான் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் சனாதனத்தை எதிர்க்கிறார்கள்.

அய்யா வைகுண்டசாமி சாதிய, மத ரீதியான அடக்கு முறைகளை எதிர்த்து பல ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தார். அவர், உன் மனசாட்சியே கடவுள் என்று கூறினார், சனாதனத்தை எதிர்த்தார். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இங்கு திராவிட மாடல் ஆட்சி நடப்பதால்தான் அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக வாழ முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்