ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சம்வஸ்திராபிஷேகம்
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சம்வஸ்திராபிஷேகம் நடந்தது.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இன்று சம்வஸ்திராபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கோவில் மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கப்பட்டு யாகபூஜைகள் நடத்தி சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதில் கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணைத்தலைவர் சாலம்மாள், கண்ணமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் சிலம்பரசன் மற்றும் உபயதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சரவணன், பெரியதனம் சாமி நடராஜன், ஆறுமுகம் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.