ெநல்லை நூலகத்தில் மாதிரி தேர்வு
ெநல்லை நூலகத்தில் மாதிரி தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம், மத்திய அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு முதல் நிலை பயிற்சிக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதற்கு முன்னோடியாக நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச மாதிரி தேர்வு நேற்று காலை நடைபெற்றது. இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், மைய நூலகர் வயலட், பயிற்சி நிறுவன நிர்வாகி சரவணன், நல்நூலகர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்வை நடத்தினர்.